நாகப்பட்டினம் மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் மதுவிலக்கு தொடர்பாக வழக்குகள் மீது தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எனவே செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த பதினெட்டாம் படியான், பி. ஆர். புரம் கோவில் தெருவை சேர்ந்த அந்தோணி ராஜ் ஆகியோர் மீது பல்வேறு சாராய வழக்குகள் இருக்கின்றது.
இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா பரிந்துரையின்படி, கலெக்டர் பிரவீன்பிநாயர் 2 பேரை கைது செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி காவல்துறையினர் குற்றவாளிகள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.