கட்சியிலும் ஆட்சியிலும் ஒரு நபருக்கு ஒரு பதவி மட்டுமே என்ற நடைமுறையை மம்தா பானர்ஜி கொண்டுவந்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்த கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி முதல்வராக பதவியேற்றார். கடந்த சனிக்கிழமை நடந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டது. கட்சியிலும் ஆட்சியிலும் ஒரு நபருக்கு ஒரு பதவி என்ற திட்டத்தை மம்தா பானர்ஜி அறிமுகம் செய்து வைத்துள்ளார். மேற்கு வங்கத்தில் கட்சி பொறுப்பில் இருப்பவர்களுக்கு அரசாங்கத்தில் பதவி இல்லை என்றும், அரசு பதவியில் இருப்பவர்களுக்கு கட்சி பொறுப்பில் இருக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.