பிரிட்டனை சேர்ந்த ஒரு குழந்தை, போர்ச்சுக்களில் காணாமல் போன வழக்கு, 14 வருடங்களாக நடந்து வரும் நிலையில் முக்கிய தகவல் கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியை சேர்ந்த விசாரணை அதிகாரி Hans Christian Wolters, இந்த வழக்கு குறித்த முக்கிய தகவல் கிடைத்திருப்பதாக கூறியுள்ளார். எனவே இன்னும் சில மாதங்களில் இந்த வழக்கில் முடிவு கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் வசிக்கும் கேட் மற்றும் கெரி மெக்கேன் என்ற தம்பதி தங்கள் குழந்தைகளுடன் போர்ச்சுக்கல் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
அப்போது வாடகைக்கு ஒரு வீட்டை எடுத்து, அதில் தங்கள் பிள்ளைகளை தூங்க வைத்துள்ளனர். அதன்பின்பு தம்பதியர் இருவரும் ஒரு உணவகத்திற்கு நண்பர்களுடன் சென்றுள்ளார்கள். அப்போது ஒரு மர்ம நபர் அவர்களின் குழந்தைகளில் ஒன்றான மேட்லின் மெக்கேனை மட்டும் கடத்தி சென்றுள்ளார்.
சுமார் 14 வருடங்கள் கடந்த பின்பும் குழந்தை கண்டறியப்படவில்லை. இதனிடையே ஜெர்மன் சிறையிலுள்ள Christian Brueckner என்ற நபர் அந்த குழந்தையை கடத்தி சென்று கொலை செய்திருப்பதாக காவல்துறையினர் கருதுகின்றனர். எனவே இச்சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தற்போது அதிகமான தகவல்கள் கிடைத்திருக்கிறது. எனவே வழக்கின் கடைசி கட்டமாக Brueckner இடம் விசாரணை நடத்த உள்ளதாகவும், அதன்மூலம் வழக்கு முடிவடைய வாய்ப்பிருப்பதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.