இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்தும் விதமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் காரணமாக தொற்று பரவல் ஓரளவிற்கு குறைந்து கொண்டு வருகின்றது. இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு நேரலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாடினார். அதில் இந்தியாவில் மூக்கின் வழியாக சொட்டு மருந்து போல செலுத்தக்கூடிய தடுப்பு மருந்து விரைவில் வர உள்ளதாக அறிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி வினியோகத்தை மத்திய அரசே ஏற்கும். அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாக தடுப்பூசி வினியோகம் செய்யப்படும் என்று கூறினார். மேலும் ஜூன் 21ம் தேதி முதல் மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும். மாநிலங்களுக்கு தேவையான 75% தடுப்பூசிகளை மத்திய அரசே கொள்முதல் செய்து விநியோகிக்கும். கொரோனா தடுப்பூசிக்காக இனி மாநில அரசுகள் செலவழிக்க தேவையில்லை என்றும், மாநில அரசுகளின் 25% பங்கையும் மத்திய அரசே ஏற்கும் என்றும் தெரிவித்த நிலையில் இதற்கு முதல்வர் முக ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.