ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி சுற்றித்திரிந்தவர்களின் 500- வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள புதுப்பட்டினம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அத்தியாவசிய தேவையின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்த 60 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அந்தப் பகுதியில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீறி திறந்து வைத்திருந்த கடை உரிமையாளர் 12 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதேபோன்று கொள்ளிடம், ஆனைக்காரன் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த 30 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீறி கடையை திறந்து வைத்திருந்த உரிமையாளர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவ்வாறு ஊரடங்கின் போது சுற்றித் திரிந்தவர்களின் 500 வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.