Categories
தேனி மாவட்ட செய்திகள்

நூதன திருட்டில் ஈடுபட்டவரை… போலீசார் பிடித்து விசாரித்ததில்… வெளிவந்த அதிர்ச்சி உண்மை…!!

தேனி மாவட்டத்தில் சில்லறை கேட்பது போல் நடித்து நூதன திருட்டில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அடுத்துள்ள பாப்பம்மாள்புரத்தில் சுப்பிரமணி(70) என்பவரது பலசரக்கு கடைக்கு சில வாரங்களுக்கு முன் ஒருவர் வந்து 2000 ரூபாய்க்கு சில்லரை கேட்டுள்ளார். இதனையடுத்து சில்லரை எடுக்க சுப்பிரமணி சென்றபோது கடையில் கல்லா பெட்டியில் வைத்திருந்த 6,000 ரூபாயை திருடிச் சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து சுப்பிரமணியன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து இதேபோல் ஆண்டிபட்டியில் மேலும் 3 கடைகளில் சில்லறை கேட்பதுபோல கேட்டு பணத்தை திருடி சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

இதுதொடர்பாக கடையின் உரிமையாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் மொட்டனூத்து கிராமத்தில் சுப்புராஜ் என்பவரின் பலசரக்கு கடையில் நேற்று முன்தினம் ஒருவர் வந்து சில்லரை கேட்பதுபோல் கேட்டுள்ளார். இதனையடுத்து அவர் மீது சந்தேகம் அடைந்த கடை உரிமையாளர் உடனடியாக ஆண்டிபட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த போலீசார் அந்த நபரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது பல உண்மைகள் வெளிவந்துள்ளன. அவர் தஞ்சாவூர் மாவட்டம் அரசம்பட்டு கிராமத்தில் வசிக்கும் விக்னேஷ் கண்ணன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவரை கைது செய்த போலீசார் நடத்திய விசாரணையில் இதே போன்று பல இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு  பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது.

Categories

Tech |