நடிகை பூமிகா சாவ்லா ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் பரவி வந்தது.
தமிழ் திரையுலகில் கடந்த 2001-ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பத்ரி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூமிகா சாவ்லா . இதை தொடர்ந்து இவர் ரோஜா கூட்டம், சில்லுனு ஒரு காதல் ஆகிய படங்களில் நடித்திருந்தார். நடிகை பூமிகா தமிழில் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்து வந்தார். இந்நிலையில் நடிகை பூமிகா ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ள இருப்பதாக தகவல் பரவி வருகிறது.
இதுகுறித்து நடிகை பூமிகா ‘இந்த தகவல் உண்மை இல்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து என்னை அழைக்கவில்லை. அவர்கள் அழைத்தாலும் நான் சொல்ல மாட்டேன். இதற்கு முந்தைய சீசன்களில் கலந்துகொள்ள என்னை அழைத்தார்கள் . ஆனால் நான் மறுத்துவிட்டேன். நான் பிரபல நடிகையாக இருந்தாலும் எப்போதும் என்னை சுற்றி கேமராக்கள் இருப்பதை விரும்பமாட்டேன்’ என தெரிவித்துள்ளார்