Categories
தேசிய செய்திகள்

எதிரெதிரே மோதிய வாகனம்… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி… அதிர்ச்சி சம்பவம்….!!!

கர்நாடக மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரும் வாகன விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், ராய்ச்சூர் மாவட்டத்தில் லிங்காசுகூர் என்ற பகுதி அருகே கார் மற்றும் இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். பாகாக்லோட் என்ற பகுதியிலிருந்து பசவராஜ் என்பவர் தனது மனைவியின் தங்கை மற்றும் மகன் ஷரத் ஆகியோருடன் லிங்காசுகூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த கார், இரு சக்கர வாகனத்தில் மோதியதில் 3 பேர் தூக்கி அடிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் மூவரின் உடலையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, பின்னர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |