கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளை மத்திய அரசு ரத்து செய்ததையடுத்து பல்வேறு மாநிலங்களிலும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழக அரசும் பிளஸ் டூ பொதுத்தேர்வு ரத்து செய்தது. இந்நிலையில் மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உரிய இடங்கள் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கே.எஸ் அழகிரி கோரிக்கை வைத்துள்ளார்.
2020இல் 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்கியும், மொத்தமுள்ள 3,400 இடங்களில் 405 இடங்கள் மட்டுமே அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைத்தது. எஞ்சிய இடங்கள் தனியார், சிபிஎஸ்இ மாணவர்களுக்கே கிடைத்தது. நீட் தேர்வால் ஏற்பட்ட அநீதியை தமிழக அரசு போக வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.