திருவள்ளூரில் உடல்நிலை பாதிக்கப்பட்ட விவசாயி மன உளைச்சலால் பூச்சி மருந்து குடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் , எல்லாபுரம் ஒன்றியம் பகுதி ,குருவாயல் கிராமத்தில் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த தினகரன் (வயது 36).விவசாயியான இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே உடல்நிலை பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 4 ஆம் தேதியன்று ,இவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மிகவும் மனமுடைந்து காணப்பட்டார்.
இதனால் அவருடைய நிலத்திற்கு சென்று ,அங்கிருந்து பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதைக் கண்டு அங்கிருந்த மக்கள் அவரை மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் ,நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தரணேஸ்வரி தலைமையிலான போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்