விருச்சிகம் ராசி அன்பர்களே.! கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.
குறை சொல்லுபவர்கள் உங்களை பாராட்டும் நாளாக அமையும். பிரிந்து சென்றவர்கள் உங்களிடம் பிரியமுடன் வந்து சேரும் நாள். மருத்துவச் செலவுகள் குறைந்துவிடும். நிம்மதியை ஏற்படுத்தும். புத்துணர்ச்சி ஏற்படும். முன்னோர் சொத்துக்களில் உள்ள பிரச்சனைகள் நீங்கிவிடும். சகோதர ஒற்றுமை பலப்படும். வீட்டை விட்டு வெளியில் தங்குவதற்கான சூழலும் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் கொஞ்சம் கோபத்தை ஏற்படுத்தும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்.
தந்தையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். மனைவியிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். குடும்ப ஒற்றுமைக்காக பாடுபடுங்கள். காதல் கைகூடி விடும். காதலில் பிரச்சனை இல்லை. மாணவர்களுக்கு தொட்டது துலங்கும். மாணவக் கண்மணிகள் என்ன நினைக்கிறார்களோ அதை உங்களால் சிறப்பாக செய்ய முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெளிர்பச்சை உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியை நீங்கள் செய்தாலும் வெற்றி நிச்சயம்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: வெளிர் பச்சை மற்றும் வெள்ளை