Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு….! லாபம் கூடும்….! புத்திக்கூர்மை வெளிப்படும்….!!

தனுசு ராசி அன்பர்களே.! புத்திக்கூர்மை வெளிப்படும்.

இன்று நல்ல வாய்ப்புகளை நல்ல விதத்தில் பயன்படுத்திக் கொள்வீர்கள். நண்பர்கள் மூலம் நலம் வந்து சேரும். சொந்த பந்தங்களுடன் ஏற்பட்ட பகை மாறி விடும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பீர்கள். வாகன பழுது செலவுகள் இருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுங்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை உங்களால் உயர்த்திக்கொள்ள முடியும். நிர்வாகத்திறமை, புத்திக்கூர்மை வெளிப்படும்.  பணியாளர்கள் மூலம் நன்மை கிடைக்கும். லாபம் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு காய் நகர்த்தி வெற்றியை எட்டிப் பிடிக்க முடியும்.

மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். காதலில் உள்ளவர்களுக்கு மனம் சந்தோஷமாக இருக்கும். காதலில் இருந்த பிரச்சனைகள் சரியாகிவிடும். மாணவர்களுக்கு கல்வியில் இருக்கக்கூடிய அனைத்து விதமான தடைகளும் விலகி செல்லும். கல்வி பற்றிய பயம் இல்லாமல் இருக்கும். விளையாட்டு துறையில் உள்ள மாணவர்களுக்கு சாதனை படைக்கக் கூடிய நாளாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே என்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் நீங்கள் செய்து வாருங்கள் முன்னேற்றம் காத்திருக்கின்றது.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு                                                                                                            அதிர்ஷ்டமான எண்:   5 மற்றும் 6                                                                                                                  அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மற்றும் வெளிர் பச்சை

Categories

Tech |