தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை அறிக்கை வரும் செப்டம்பர் 16-ம் தேதி தாக்கல் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் மூடப்பட்டதாக வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது மக்கள் அதிகாரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தூத்துக்குடி துப்பாக்கி சூடு திட்டமிட்டு நடைபெற்றது. 13 13 பேர் குடும்பம் சிக்கி தவித்து வருகின்றது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் , ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான குழு ஆணையமும் விசாரணை நடத்தியது என்றெல்லாம் வாதிடப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை மற்றும் அருணா ஜெகதீசன் தலைமை ஆணையம் விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். அதன்படி இன்று சிபிஐ தரப்பில் தாக்கல் செய்த அறிக்கையில் இதுவரை நடந்த விசாரணை குறித்த தகவல்கள் செப்டம்பர் 16_ஆம் தேதி தாக்கல் செய்ய இருப்பதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
மேலும் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை தொடங்கியது முதல் மாவட்ட காவல் துறை , மாவட்ட ஆட்சியர் அலுவலகம் , அரசு மருத்துமனை , தீயணைப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் இடமிருந்து ஆவணங்கள் மற்றும் சிபிசிஐடி பதிவு பெறப்பட்டதாகவும் , அதை ஆய்வு செய்து சிசிடிவி பதிவுகளை தடவியல் ஆய்வுக்காக அனுப்பி உள்ளதாக தெரிவித்தள்ளது.இது தொடர்பான முழு அறிக்கையும் செப்டம்பரில் தாக்கல் செய்யபடும் என்றும் சிபிஐ தெரிவித்துள்ளது.