கும்பம் ராசி அன்பர்களே.! பண வரவு உண்டாகும்.
இன்று இடம், பூமி ஆகியவற்றால் லாபம் கிடைக்கும். இல்லத்தில் உள்ள தேவைகளை பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகள் குடும்ப பொறுப்புகளை உணர்ந்து நடந்து கொள்வார்கள். வீண் அலைச்சல் குறைந்து விடும். அடுத்தவரின் உதவிகளை எதிர்பார்க்க மாட்டீர்கள். வெளிவட்டாரத்தில் உங்களுடைய புகழ் ஓங்கும். அதிகப்படியான பணி சுமை இருக்கும். பணிச்சுமைக்கு ஏற்ப பணவரவும் இருக்கும். தொய்வடைந்த தொழிலை தூக்கி நிறுத்த முடியும். இன்று குடும்பத்தை பொறுத்தவரை அனைவரின் மீதும் அன்பு இருக்கும். குடும்பத்தில் தேவைகள் அனைத்தும் நிறைவேற்ற முடியும்.
கணவன் மனைவிக்கு இடையே அன்பு ஏற்படும். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு இல்லத்தில் மழலை செல்வம் கிடைக்கக்கூடிய அம்சம் இருக்கின்றது. காதலில் பிரச்சனைகள் இல்லாமல் சுமுகமாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் விலகி செல்லும். கல்விக்காக போராடிய விஷயங்கள் அனைத்தும் முன்னேற்றத்தை கொடுக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பிரவுன் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிரவுன் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படி இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் நீங்கள் செய்து வாருங்கள் வெற்றி என்பது நிச்சயம்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 6 அதிர்ஷ்டமான நிறம்: பிரவுன் மற்றும் வெள்ளை