தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த 24ஆம் தேதி கடுமையான முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அடுத்தடுத்து அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கானது நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில் வருகிற 14-ஆம் தேதி வரை சில தளர்வுகள் அளித்து மேலும் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் மக்கள் காட்டாற்று வெள்ளம்போல வெளியே வரத் தொடங்கியதால் சென்னையில் பல இடங்களில் டிராபிக் ஜாம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக சென்னையில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து ஏற்கனவே சென்னையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் ஜூன்-14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவல் காரணமாக 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்களை தேவையில்லாமல் கூடக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.