Categories
மாநில செய்திகள்

முன்களப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை…. ரூ.160 கோடி ஒதுக்கீடு…. தமிழக அரசு அரசாணை….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் முன் களப் பணியாளர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. மருத்துவ மற்றும் சுகாதார துறை பணியாளர்கள் முன்கள பணியாளர்களாக செயலாற்றி கொரோனாவை கட்டுக்குள் வைக்க போராடி வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் என் உயிரை பணயம் வைத்து ஒரு நாள் குறித்த விழிப்புணர்வுகளை பத்திரிக்கையாளர்கள் மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறார்கள். அவர்களும் உன் களப்பணியாளர்கள் என்று தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. இவர்கள் அனைவருக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், கொரோனா தொடர்பான பணிகளில் இந்த வருடம் ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய மூன்று மாதங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் காலமுறை ஊதியத்துடன் கூடிய அரசு பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்கள், அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் பணியாற்றி வரும் தகுதி வாய்ந்த பணியாளர்களுக்கு நிதி தொகுத்து வழங்குவதற்காக 160 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |