கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளை மத்திய அரசு ரத்து செய்ததையடுத்து பல்வேறு மாநிலங்களிலும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. நோய்த்தொற்று தீவிரம் காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் மாணவர்களுக்கு ஏற்கனவே செய்முறை தேர்வு மட்டும் நடத்தப்பட்டுள்ளது. எனவே மாணவர்களுக்கு எதனடிப்படையில் மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் சிபிஎஸ்இ பள்ளியில் படிக்கும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் ஜூன் 28-ஆம் தேதிக்குள் தங்களுடைய செய்முறை மதிப்பெண்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்வை பள்ளிகள் நடத்தாமல் இருந்தால் அவற்றை இணைய வழியில் நடத்தி முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.