Categories
மாநில செய்திகள்

புதுச்சேரியில் இன்று முதல் ஊரடங்கில் தளர்வுகள்…. எதற்கெல்லாம் அனுமதி?….!!!!

புதுச்சேரியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 24-ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்போது காய்கறி மற்றும் மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டும் மதியம் 12 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் ஜூன் 1-ஆம் தேதி முதல் 7ம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்த காரணத்தால் மேலும் ஒரு வாரம் தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி புதுச்சேரியில் இன்று முதல் அனைத்து கடைகளும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காய்கறி மற்றும் பல கடைகள் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். உணவகங்களில் மாலை 5 மணி வரை பார்சல் வினியோகம் செய்யப்படும். அனைத்து அரசு அலுவலகங்களும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம். பெரிய மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளும் வழக்கம் போல செயல்பட அனுமதி. ஆனால் இவை அனைத்தும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி செயல்பட வேண்டும்.

சரக்கு போக்குவரத்து மற்றும் பொது போக்குவரத்துக்கு அனுமதி. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மாலை 5 மணி வரை இயங்க அனுமதி. ஆட்டோ பார்களும் இயங்கலாம். பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும். கடற்கரை சாலையில் காலை 5 மணி முதல் காலை 9 மணி வரை நடைப்பயிற்சி செய்ய அனுமதி. ஆனால் சமூக இடைவெளியை கடைபிடித்து முக கவசம் அணிய வேண்டும். அனைத்து வழிபாட்டு தலங்களும் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி. தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி. இன்று முதல் சாராயம், மது கடைகள் திறக்க அனுமதி. இந்த உத்தரவை ஜூன் 14 ஆம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |