தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் திமுக நிர்வாகிகள் ஏதாவது தவறு செய்தால் பாரபட்சம் பார்க்காமல் தண்டித்து வருகிறார். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்மா உணவகத்தை தாக்கிய திமுக நிர்வாகிகள் இரண்டு பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இந்நிலையில் மதுரை வாடிப்பட்டியில் பேக்கரி தாக்கப்பட்ட விவகாரத்தில் திமுக நிர்வாகி பிரகாசம் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். வாடிபட்டி பேரூர் செயலாளர் பிரகாசம் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக துரைமுருகன் அறிவித்துள்ளார் m