Categories
மாநில செய்திகள்

”மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துங்க” ஸ்டாலின் கோரிக்கை …!!

போராட்டம் நடத்தும் மருத்துவர்களை அழைத்து அரசு பேச்சுவாரத்தை நடத்த வேண்டுமென்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் , கலந்தாய்வு அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் , பட்ட மேற்படிப்பு 50 சதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வைத்து அரசு மருத்துவமனை மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனையில் இந்த போராட்டம் நடந்து வருவதால் பொதுமக்களும் , நோயாளிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Image result for மருத்துவர்கள் போராட்டம்

போராட்டம் நடத்தும் மருத்துவர்களிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென்று பல்வேறு அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் மக்களின் நலன் கருதி மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |