Categories
மாநில செய்திகள்

BREAKING: இன்று முதல் டாஸ்மாக் திறப்பு…. அதிரடி அறிவிப்பு….!!!!

புதுச்சேரியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 24-ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்போது காய்கறி மற்றும் மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டும் மதியம் 12 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் ஜூன் 1-ஆம் தேதி முதல் 7ம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்த காரணத்தால் மேலும் ஒரு வாரம் தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி புதுச்சேரியில் இன்று முதல் அனைத்து கடைகளும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காய்கறி மற்றும் பல கடைகள் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். உணவகங்களில் மாலை 5 மணி வரை பார்சல் வினியோகம் செய்யப்படும். அனைத்து அரசு அலுவலகங்களும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம்.

பெரிய மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளும் வழக்கம் போல செயல்பட அனுமதி. ஆனால் இவை அனைத்தும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி செயல்பட வேண்டும்.மேலும் இன்று முதல் மதுபானக்கடைகளை திறக்கும் அனுமதி அளித்துள்ளது. மதுக்கடைகள் திறப்பால் நாகை உள்ளிட்ட அருகிலுள்ள மாவட்டத்தை சேர்ந்தவர்கள் புதுச்சேரிக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர்.

Categories

Tech |