Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில்…. இடியுடன் கூடிய கனமழை….!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் இடியுடன் கனமழை பெய்தது. நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்த நிலையில் நள்ளிரவில் மீண்டும் மழை கொட்டி தீர்த்தது. அம்பத்தூரில் சூறைக்காற்றுடன் பரவலாக மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை கொட்டித் தீர்த்தது.

அதனால் சாலையில் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் நேற்று நள்ளிரவு கன மழை பெய்தது. இன்னும் 3 நாட்களுக்கு மழை தொடரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |