Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் தடுப்பூசி கடும் தட்டுப்பாடு….. மக்கள் பெரும் அதிர்ச்சி….!!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில்,தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது.

இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவில்லை. ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மாவட்ட சுகாதார கிடங்கு ஆகிய பகுதிகளில் மருந்து இல்லை. தடுப்பூசி மருந்து முழுமையாக எங்கும் இல்லை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |