பனை மரத்திலிருந்து கீழே விழுந்ததால் பேராசிரியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள செங்குன்றம் பகுதியில் லோகநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெள்ளானூரில் இருக்கும் தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கின்றது. தற்போது சாந்தி மூன்று மாதம் கர்ப்பமாக இருக்கின்றார். இந்நிலையில் லோகநாதன் பனை மரத்தில் ஏறி நுங்கு வெட்டி கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி லோகநாதன் பரிதாபமாக இறந்துவிட்டார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த சோழவரம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.