இந்தியாவில் ஆன்லைன் வாயிலாக வருமான வரி தாக்கல் செய்ய http://income-tax.gov.in என்ற புதிய இணையதளத்தை வருமான வரித் துறை நேற்று தொடங்கியது. இந்த இணையத்தளம் பல புதிய அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே வருமான வரி செலுத்துவோர் உட்பட அனைவருக்கும் வருமான வரி தொடர்பான அனைத்து சேவைகளையும் ஒற்றை சாளர முறையில் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கம் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. மேலும் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு இணைப்பதற்கான கால அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய இணையதளம் மூலம் ஆதார் மற்றும் பான் கார்டு இணைத்துக் கொள்ளலாம்.
Categories