பணியாளர்கள் நேரடியாக வீடுகளுக்கு சென்று 18 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.
தமிழகத்தில்கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி வாஞ்சியூர் மற்றும் துண்டகட்டளை கிராமங்களில் ஊராட்சி மன்றம் சார்பில் பொதுமக்களுக்கு ஆக்சிஜன் அளவு மற்றும் உடல் வெப்பநிலையை கண்டறியும் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இந்த முகாமின் மூலம் ராமாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் விழிவழகன் தலைமையில் அங்கன்வாடி பணியாளர்கள் வாஞ்சியூர் மற்றும் துண்டகட்டளை கிராமங்களில் உள்ள 450 வீடுகளுக்கு நேரில் சென்று 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் ஆக்சிஜன் அளவு மற்றும் உடல் வெப்பநிலையை கண்டறியும் பரிசோதனையை மேற்கொண்டனர். மேலும் ராமாபுரம் ஊராட்சியில் இருக்கக்கூடிய அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதார பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஊராட்சி மன்ற துணை தலைவர் அமலா குணசேகரன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.