தமிழ்நாட்டில் அரசுப் பணிக்கு நியமனம் செய்யும்போது முன்னுரிமை தரப்பட வேண்டிய வரிகளில் கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களையும் சேர்த்து எம்ஜிஆர் தலைமையிலான அரசு 1986ம் ஆண்டு ஆணையிட்டது. ஆனால் இந்தத் திட்டத்தை கடந்த அதிமுக அரசு செயல்படுத்தவில்லை. இந்நிலையில் தற்போது ஸ்டாலின் தலைமையிலான அரசு இந்தத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று ரவிக்குமார் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். தற்போது முதல்வராக உள்ள ஸ்டாலின் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அதே மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதனால் சமூக நீதியில் அக்கறை கொண்ட திமுக அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Categories