விஜய் சேதுபதி பட இயக்குனர் ஆர்யாவுடன் கூட்டணி அமைக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதியின் ‘சூது கவ்வும்’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நலன் குமாரசாமி. இதையடுத்து அவர் மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து ‘காதலும் கடந்து போகும்’ எனும் திரைப்படத்தையும், ‘குட்டி ஸ்டோரி’ எனும் ஆந்தாலஜி படத்தையும் இயக்கினார்.
இப்படி தொடர்ந்து விஜய் சேதுபதியை வைத்து படத்தை இயக்கி வந்த நலன் குமாரசாமி தற்போது ஆர்யாவுடன் கூட்டணி அமைத்துள்ளார். அதன்படி ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் ஒரு பேண்டசி திரில்லர் கதையம்சம் கொண்டதாக அமையவிருக்கிறது. கொரோனா பரவல் குறைந்த பின்பு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது. கூடிய விரைவில் இப்படத்திற்கான அடுத்த அடுத்த அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.