பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அரசு மருத்துவர்களுடன் தமிழக அரசின் தரப்பில் பேச்சு வார்த்தை நடைப்பெற்று வருகின்றது.
மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும் , மருத்துவ மேல்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழகம் முழுவது அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் அரசுடன் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். கோரிக்கைகளை ஏற்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு மருத்துவர்களிடம் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. இதில் மருத்துவர்கள் பிரதிநிதிகள் , தமிழக அரசு சார்பில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் , பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.