Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கானா விஷ்ணுவின்… கொரோன விழிப்புணர்வு பாடல்… வெளியிட்ட மாவட்ட கலெக்டர்…!!

கானா விஷ்ணு பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடலை மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவி வந்தபோதிலும் பொதுமக்கள் சிலர் விழிப்புணர்வு இன்றி சாலையில் சுற்றித் திரிகின்றனர். மேலும் சிலர் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் தொற்று பரவும் அச்சம் இல்லாமல் வெளியே செல்கின்றனர். இதனால் காவல் துறையினரும் பல்வேறு தரப்பினரும் பொதுமக்களுக்கு நோய்த் தொற்று பரவாமல் இருப்பதற்காக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைத்த கானா விஷ்ணு பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடலை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஸ்பராஜ், மன்னா டிசைனர் குழுவினர் சார்பில் தயாரிக்கப்பட்ட கானா விஷ்ணு பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடலை வெளியிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியின்போது பாடல் தயாரிப்பு குழுவினர் கொரோனா தொற்று பாதுகாப்பு விதிமுறைகளைை பின்பற்றியவாறு கலந்து கொண்டனர்.

Categories

Tech |