Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதுக்கும் ஒரு மனசு வேணும்..! ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழைகள்… எம்.எல்.ஏ.வின் தன்னிகரற்ற செயல்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் தமிழரசி எம்.எல்.ஏ. ஏழை, எளிய குடும்பங்களுக்கு தனது சொந்த செலவில் நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம் ஆகிய பல்வேறு பகுதிகளில் தமிழரசி எம்.எல்.ஏ. ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு தனது சொந்த செலவில் நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து வின்சென்ட் நகர், காந்திஜி நகர் பகுதியில் நேற்று 125 குடும்பங்களுக்கு காய்கறிகள், அரிசி ஆகிய நிவாரண பொருட்களையும் வழங்கியுள்ளார். அதில் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜமணி, யூனியன் துணை தலைவர் முத்துசாமி, ஊராட்சி தலைவர் ஜானகி, மாணவரணி கார்த்திக், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலகிருஷ்ணன், மீனவரணி பாஸ்கரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

அதேபோல் தாசில்தார் ஆனந்த் தலைமையில் இளையான்குடி சந்தைப்பேட்டையில் நடந்த விழாவில் மாற்றுத்திறனாளிகள், சுகாதாரப்பணியாளர்கள் என மொத்தம் 270 குடும்பங்களுக்கு காய்கறிகள், அரிசி உள்ளிட்ட பொருட்களை தமிழரசி எம்.எல்.ஏ. வழங்கியுள்ளார். மேலும் மாணவரணி செயலாளர் சாமிவேல் தலைமையில் வளையனேந்தல் கிராமத்தில் நடைபெற்ற விழாவில் சுமார் 150 பேருக்கு நலத்திட்ட உதவிகளும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நகர கழக செயலாளர் நஜிமுதீன், எம்.எல்.ஏ. சுப.மதியரசன், கழக செயலாளர்கள் வெங்கட்ராமன், செல்வராஜன், தமிழ்மாறன், ஒன்றிய கவுன்சிலர் அய்யாசாமி, முருகன் என ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

Categories

Tech |