Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மக்கள் அலட்சியமா இருக்காதீங்க…. 4 ஏக்கர் அளவில் இடம் ஒதுக்கீடு…. கலெக்டரின் வேண்டுகோள்….!!

ஊரடங்கு தளர்வுகளோடு இருப்பதனால் பொதுமக்கள் அலட்சியமாக இருக்க என்று கலெக்டர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவித்துள்ளது. அதன்படி மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா பரவலை தடுக்க தாம்பரம் மார்க்கெட் பகுதி அடைக்கப்பட்டு கடைகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் தாம்பரம் மார்க்கெட் பகுதியை மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் ஆய்வு செய்து விற்பனையாளர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். அப்போது தாம்பரம் நகராட்சி கமிஷனர் சித்ரா, கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் பலர் அவருடன் இருந்தனர்.

இதுகுறித்து கலெக்டர் ஜான் லூயிஸ் கூறியபோது, மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வருவதனால் பொது மக்களின் வாழ்வாதாரத்தை காப்பதற்காக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இதனால் பொதுமக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம் என்றும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனையடுத்து பெரிய மார்க்கெட் வியாபாரிகளை வருவாய் கோட்டாட்சியர் மற்றும் நகராட்சி கமிஷனர் ஆகியோர் அழைத்து பேசியுள்ளனர். அதன்பின் இரும்புலியூர் பகுதியில் 4 ஏக்கர் அளவில் தற்காலிக மார்கெட் செயல்பட இடம் ஒதுக்கி இருப்பதால் வியாபாரிகள் அங்கு கடைகள் அமைக்கலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஆனால் வியாபாரிகள் தொடர்ந்து தள்ளுவண்டியில் விற்பனை செய்வதாக அதிகாரிகளிடம் கூறியுள்ளனர். அதன்படி வியாபாரிகளுக்கு எத்தனை தள்ளுவண்டி வாகனங்கள் தேவைப் படுகின்றதோ அதை வழங்கும்படி நகராட்சி கமிஷனருக்கு ஜான் லூயிஸ் உத்தரவிட்டுள்ளார். எனவே பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி வாகனங்களில் வரும் காய்கறிகளை வாங்கிக்கொண்டு வீட்டை விட்டு வெளியில் வராமல் இருக்கும்படி கலெக்டர் ஜான் லூயிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |