விருதுநகர் மாவட்டத்தில் அனுமதியின்றி சாராயம் விற்பனை செய்தவரை கைது செய்த போலீசார் 15 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் ரோசல்பட்டியில் உள்ள அரண்மனை தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார்(22). அவர் அப்பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பாண்டியன் நகர் போலீசார் வழக்கம்போல ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ரோசல்பட்டியில் சாராயம் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது இரண்டு பிளாஸ்டிகுடங்களில் வைத்து சாராயம் விற்பனை செய்தது உறுதியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து முத்துக்குமாரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 15 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.