சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடபொன்பரப்பி காவல்துறையினர் புதுப்பட்டு, தொழுவந்தாங்கல், புதூர் ஆகிய பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்த குற்றத்திற்காக தொழுவந்தாங்கல் பகுதியில் வசிக்கும் தனசேகர், திலிப் குமார், ராஜ்குமார், குமரேசன் ஆகிய 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்த 100 லிட்டர் சாராயத்தையும், 2 இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.