தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த 24ஆம் தேதி கடுமையான முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அடுத்தடுத்து அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கானது நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில் வருகிற 14-ஆம் தேதி வரை சில தளர்வுகள் அளித்து மேலும் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதனபடி, தனியாக செயல்படும் காய்கறி கடைகள், மளிகை கடைகள் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் பார்சலுக்கு மட்டும் அனுமதி. இந்நிலையில் பேக்கரி மற்றும் உணவகங்களில் உணவுப் பொருட்களை பார்சல் செய்யும் போது, எச்சிலை பயன்படுத்தக் கூடாது என்று சுற்றறிக்கை வெளியிட தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.