உலகின் பல நாடுகளிலும் கொரோனா இரண்டாவது அலை அதிகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே நிரந்தரத் தீர்வு என்பதால் பல்வேறு நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி யை அவசரமாக செலுத்தி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனாவிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முகக் கவசம் அணிதல் பல்வேறு நாடுகளிலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஒருவரிடமிருந்து ஒருவருக்கு நோய்த்தொற்று பரவாமல் தடுக்க முடியும் என்பதற்காக வெளியில் செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இஸ்ரேலில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 16 வயதிற்கு மேற்பட்ட 80 சதவீதம் பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதையடுத்து அங்கு கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் உள் அரங்கங்களில் இனி முகக்கவசம் அணிய தேவையில்லை என்று அந்நாட்டு சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.