Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஜகமே தந்திரம்’ படத்தில் இந்த 2 பாடல்கள் கிடையாது… ரசிகர்களை ஏமாற்றிய கார்த்திக் சுப்புராஜ்…!!!

ஜகமே தந்திரம் படத்தில் புஜ்ஜி மற்றும் நேத்து ஆகிய இரண்டு பாடல்களும் இடம்பெறாது என இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார் ‌.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் வருகிற ஜூன் 18 ஆம் தேதி நெட்பிலிக்ஸில் வெளியாகவுள்ளது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி, கலையரசன், ஜோஜு ஜார்ஜ், ஜேம்ஸ் காஸ்மோ, சஞ்சனா நடராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் மற்றும் ரகிட ரகிட, புஜ்ஜி, நேத்து ஆகிய மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

Nethu video song from Dhansuh-Karthik Subbaraj's Jagame Thandhiram out-  Cinema express

இதில் நேத்து பாடலை தனுஷும், புஜ்ஜி பாடலை அனிருத்தும் பாடியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘ஜகமே தந்திரம் படத்தில் புஜ்ஜி மற்றும் நேத்து ஆகிய இரண்டு பாடல்களும் இடம் பெறாது’ என தெரிவித்துள்ளார் . அதாவது ஜகமே தந்திரம் படம் 17 மொழிகளில் வெளியாவதால் மொழிமாற்றம் கருதி இந்த இரண்டு பாடல்களை நீக்கிவிட்டதாக அவர் கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

 

Categories

Tech |