கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள லாடபுரம் கிராமத்தில் வசிக்கும் கூலி தொழிலாளியான ஜெயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தர்ஷினி என்னும் பி.ஏ பட்டதாரி மகள் இருந்துள்ளார். தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் தர்ஷினி உயர்கல்வி பயிலாமலும், வேலை இன்றியும் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் அவரின் பெற்றோர் வயல் வேலைக்கு சென்ற பிறகு தர்ஷினி தனது வீட்டில் இருக்கும் ஒரு அறையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதனை அடுத்து வேலைக்கு சென்ற பெற்றோர் திரும்பி வந்து பார்த்த போது தனது மகள் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் அங்கு விரைந்து சென்று தர்ஷினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.