லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி வரும் தெலுங்கு படத்தில் நடிகர் அருண் விஜய் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் இயக்குனர் லிங்குசாமி ரன், சண்டக்கோழி, பையா, வேட்டை போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
சமீபத்தில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் மாதவனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் அருண் விஜய் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.