Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இங்க இப்படி தங்குறது…? சீக்கிரம் சரி பண்ணி தாங்க… அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…!!

பாழடைந்து கிடக்கும் மருத்துவர்கள் குடியிருப்பை சரி செய்து தருமாறு அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவரங்குளம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் பட்டமரங்கள் அகற்றப்படாமல் இருப்பதால் நோயாளிகள்  பயத்துடனே அங்கு சென்று வருவது வழக்கம். மேலும் இந்த மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு என அங்கு குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது.

ஆனால் பல மாதங்களாக இந்த கட்டிடங்கள் பராமரிக்கப்படாமல் பாழடைந்து காணப்படுவதால் அங்கு யாரும் செல்வதில்லை. எனவே மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள இந்த குடியிருப்புகளை பராமரிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு  அரசுக்கு அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |