Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பிளக்கை கையில் எடுத்த போது… சிறுவனுக்கு நடந்த விபரீதம்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மின்சாரம் பாய்ந்து 8 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள ஆத்தூரில் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளை அமைந்துள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள காக்களூர் பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் தனது குடும்பத்தினருடன் அப்பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியில் தங்கியிருந்து செங்கல் சூளையில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கோகுல சாரதி என்ற 8 வயது மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சிறுவன் கோகுல சாரதி மின்சார விசிறியை இயக்குவதற்காக ஸ்விட்ச் பலகையில் பிளக்கை சொருக முயற்சி செய்துள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததால் சம்பவ இடத்திலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சோழவரம் காவல் துறையினர் அங்கு விரைந்து சென்று சிறுவனின் உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |