Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அணை நீர் திறப்பால் முதல் சம்பா நெல் சாகுபடி தொடக்கம்… விவசாயிகள் மகிழ்ச்சி..!!

பொள்ளாச்சி ஆழியார் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் விவசாயிகள் உற்சாகத்துடன் முதல் சம்பா நெல் சாகுபடியை தொடங்கியுள்ளனர். 

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 1 மாதங்களாக மழையானது பரவலாக  பொலிந்து வந்தது. அந்தவகையில் ஆனைமலை சுற்றுவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கன மழை பெய்தது. இதன் காரணமாக ஆழியார் அணையில் நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து அப்பகுதி விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று,

Image result for நெல் சாகுபடி

முதல் சம்பா நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனை தொடர்ந்து விவசாயிகள் வயல்வெளிகளில் நெல் நடவு பணியை தொடங்கியுள்ளனர். பெண்கள் கிராமியப் பாடல்களைப் பாடி உற்சாகத்துடன் நெல் நடவு செய்தனர். தண்ணீர் திறந்துவிடப்பட்டு நெல் சாகுபடி பணிகள் உற்சாகத்துடன் விரைவாக நடைபெற்று வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |