Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திடீரென மாயமான சிறுமிகள்…. தொழிலாளர்கள் செய்த கொடுமை… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

2 தொழிலாளர்கள் சிறுமிகளை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சியில் இருக்கும் தென்னை நார் தொழிற்சாலையில் 14 மற்றும் 15 வயது சிறுமிகள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் வேலை பார்க்கும் சிறுமிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த சிறுமிகளின் பெற்றோர் உடனடியாக ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதே தொழிற்சாலையில் வேலை பார்க்கும் சரவணகுமார் மற்றும் சின்னதுரை போன்றோர் சிறுமிகளை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சிங்காநல்லூர் பகுதியில் இருந்த சிறுமிகளையும், 2 வாலிபர்களையும் காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தி உள்ளனர். அந்த விசாரணையில் சிறுமிகளிடம் ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துச் சென்ற இருவரும் அவர்களை பாலியல் பலாத்காரம் செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனால் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் துறையினர் சின்னதுரை மற்றும் சரவண குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |