Categories
மாநில செய்திகள்

மாதாந்திர நிதியுதவி ரூ.3000 ஆக உயர்வு….. தமிழக அரசு அரசாணை…..!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மேலும் பல்வேறு முறைகளில் மக்கள் அனைவருக்கும் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நலிந்த கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர நிதி உதவியை ரூ.2000- த்திலிருந்து ரூ.3000-ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள 6600 அகவை முதிர்ந்த செவ்வியல் மற்றும் கிராமிய கலைஞர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |