தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். மக்களுக்கு பல நிதி உதவிகளை தமிழக அரசு வழங்கிவருகிறது. இந்நிலையில் கிருமி நாசினி மற்றும் முக கவசம் உள்ளிட்ட 15 பொருட்கள் அத்தியாவசிய பொருட்கள் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
அதன்படி எண் 95 மாஸ்க் ரூ.22- க்கு மேல் விற்கக் கூடாது. கிருமிநாசினி 200 மில்லி 100 ரூபாய், பிபிஇ கிட் அதிகபட்சமாக ரூ.273, கையுறை ஒன்று அதிகபட்சமாக ரூ.15, மூன்று வெவ்வேறு வகைகளை கொண்ட சர்ஜிகள் முகக் கவசங்கள் ரூ.3, ரூ.4, ரூ.5 என்ற விலையில் விற்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.