Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சித்தப்பா செய்யுற வேலையா இது… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… கோவையில் பரபரப்பு…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நெல்லித்துறை பகுதியில் 14 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அடிக்கடி குடித்துவிட்டு வரும் சிறுமியின் சித்தப்பாவான முருகேசன் என்பவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து சிறுமி வேலை பார்க்கும் இடத்தில் டைல்ஸ் ஒட்டும் பணிபுரிந்த சம்பத் என்ற வாலிபரும் சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனால் அந்த சிறுமி இரண்டு மாதம் கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் படி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அவரது  சித்தப்பா முருகேசன் மற்றும் தொழிலாளியான சம்பத் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |