இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள தொட்டியம் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வள்ளி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகியும் இன்னும் குழந்தை பிறக்கவில்லை. இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த வள்ளி தனது வீட்டு குளியலறையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் உடனடியாக வள்ளியை மீட்டு தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.