Categories
உலக செய்திகள்

“இஸ்லாமிய குடும்பத்தினர் படுகொலை!”.. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கண்டனம்..!!

கனடா நாட்டில் இஸ்லாமிய குடும்பத்தின் மீது லாரி ஏற்றிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கனடாவின் ஒன்ராறியோவில் உள்ள லண்டனில் வசிக்கும் ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பாட்டி, ஒரு தம்பதியினர் மற்றும் அவர்களின் மகள் என்று நால்வர் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் மீது லாரி ஏற்றபட்டு படுகொலை செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து லாரி ஓட்டுநர் Nathaniel Veltman என்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் அந்த நபர், முஸ்லிம் எதிர்ப்பு அமைப்புகளுடன் தொடர்புடையவரா? என்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான், இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ஒன்ராறியோவின் லண்டன் பகுதியில் பாகிஸ்தான் வம்சாவளியினரான இஸ்லாமிய குடும்பம் கொலை செய்யப்பட்டதை அறிந்தவுடன் கவலையடைந்தேன்.

தீவிரவாதத்தின் இந்த கண்டிக்கக்கூடிய செயலானது, முஸ்லிம் எதிர்ப்பு அலைகள் மேற்கத்திய நாடுகளில் அதிகரிப்பதை காட்டுகிறது. மேலும் சர்வதேச சமூகமானது, இந்த முஸ்லிம் எதிர்ப்பு அமைப்புகளை முழுமையாக எதிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |