தமிழகத்தில் இன்று நாம் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இருந்தாலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு படுக்கை வசதியும், சிகிச்சை அளிக்க மருத்துவர்களும், தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.
மேலும் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் பொதுமக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள்.இந்நிலையில் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் ஆபத்து குறித்த தகவல் தெரிவிக்க தனி வாட்ஸ் அப் எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாநில அவசர கட்டுப்பாடு மையத்திற்கு 94458 69848 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும், 1070 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலமும் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.