மத்திய பிரதேசம், அலிராஜ்பூர் மாவட்டத்தில் பயிரிடப்படும் மாம்பலம் ஒன்றின் விலை 500 முதல் 1000 வரை விற்பனையாகி வருகிறது.
மத்திய பிரதேச மாநிலம், அலிராஜ்பூர் என்ற மாவட்டத்தில் பயிரிடப்படும் நூர்ஜஹான் என்று அழைக்கப்படும் மாம்பழம் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு நல்ல மகசூல் விலையை பெற்றுள்ளது. இந்த மாம்பழம் ஒன்றின் விலை 500 முதல் 1000 வரை விற்பனையாகி வருவதாக கூறப்படுகின்றது. இந்த ஆண்டு சாதகமான வானிலை காரணமாக மாம்பழங்களின் விளைச்சல் நன்றாக உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளார். நூர்ஜஹான் என்று அழைக்கப்படும் இந்த மாம்பழம் ஆப்கானிய வம்சாவளியை சேர்ந்தது என்றும், குஜராத் எல்லையை ஒட்டிய இந்தூரில் இருந்து 250 கிலோ மீட்டரில் இந்த மரங்கள் பயிரிடப்பட்டுள்ளதாகவும் உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.
இதுகுறித்து சிவராஜ் சிங் யாதவ் கூறுகையில் எனது பழ தோட்டத்தில் 3 நூர்ஜஹான் மா மரங்கள் உள்ளன. இந்த மரங்களில் 250 பழங்கள் உற்பத்தி ஆகி உள்ளது. பழம் ஒன்றின் விலை 500 முதல் 1000 வரை விற்பனையாகிறது. மேலும் இந்த பழத்தை அனைவரும் முன்பதிவு செய்துள்ளனர். ஒரு மாம்பழத்தின் எடை 2 கிலோ முதல் 3.5 கிலோ வரை இருக்கும் என்று கூறப்படுகின்றது. இந்த மாம்பழத்தை முன்பதிவு செய்தவர்கள் மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலத்தை சேர்ந்த மாம்பழ பிரியர்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.